24. அருள்மிகு ஐராவதேஸ்வரர் கோயில்
இறைவன் ஐராவதேஸ்வரர்
இறைவி மலர்குழல் நாயகி
தீர்த்தம்  
தல விருட்சம்  
பதிகம் சுந்தரர்
தல இருப்பிடம் திருஎதிர்கொள்பாடி, தமிழ்நாடு
வழிகாட்டி 'மேலத்திருமணஞ்சேரி' என்றும் அழைக்கப்படுகிறது. திருமணஞ்சேரிக்கு அருகில் உள்ளது. திருவேள்விக்குடிக்கு வடமேற்கே 3 கி. மீ. தொலைவில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து 13 கி.மீ.
தலச்சிறப்பு

Thiruedirkolpadi Gopuramகுத்தாலத்தில் ஆசிரமம் அமைத்து சிவபெருமானை வழிபட்டு வந்த பரத மகரிஷியின் மகளாக பார்வதி தேவி அவதாரம் செய்தாள். தக்க பருவம் வந்ததும் சிவபெருமானையே மணக்க வேண்டி கடும்தவம் புரிய, அவரும் காட்சியளித்து பார்வதியை மணந்துக் கொள்வதாக அருள்புரிந்து மறைந்தார்.

அதன்படி திருமணத்திற்கு வந்த சிவபெருமானை பரத முனிவர் எதிர்கொண்டு அழைத்ததால் இத்தலம் 'திருஎதிர்கொள்பாடி' என்று அழைக்கப்படுகிறது. அரசகுமாரன் ஒருவன் தனது மனைவியுடன் இந்த ஊருக்கு வரும்போது அவனது மாமனைப் போல் சிவபெருமான் எதிர்கொண்டு அழைத்ததால் இப்பெயர் வந்ததாகவும் கூறுவர். ஐராவதம் பூஜை செய்ததால் இத்தலத்து மூலவர் 'ஐராவதேஸ்வரர்' என்று அழைக்கப்படுகின்றார்.

Thiruedirkolpadi AmmanThiruedirkolpadi Moolavarமூலவர் 'ஐராவதேஸ்வரர்' என்ற திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், லிங்க வடிவில் மேற்கு நோக்கி காட்சி தருகின்றார். அம்பிகை 'மலர்க்குழல் நாயகி' என்ற திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.

கோஷ்டத்தில் பிட்சாடனர், விநாயகர், நடராஜர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, கங்காவிசர்ஜனர், சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், சமயக் குரவர்கள் நால்வர், வள்ளி தேவசேனை சமேத சுப்ரமண்யர், கஜலட்சுமி, காலபைரவர், சனீஸ்வரன் முதலானோர் தரிசனம் தருகின்றனர்.

சுந்தரர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com